குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Friday, April 27, 2012

139.குறுந்'தொகைகள்-27.04.2012


இன்றைய செய்திகளின் படி சச்சின் தெந்துல்கர் மற்றும் ரேகா போன்றோர் மாநிலங்களவையின் உறுப்பினர்களாக நியமிக்கப் படுவார்கள் என்று தெரிகிறது.

இது நியமன உறுப்பினர் பதவி.சட்ட மன்ற உறுப்பினர்கள் வாக்களித்து வரும் வழி கூட அல்லாது,மாநிலங்களில் வாரியத்தலைவர்கள் நியமிக்கப்படுவது போல குடியரசுத்தலைவர் நியமனத்தின் படி அமைவது.

மாநிலங்கள் அவையின் நோக்கம்,மக்களவையின் விவாதங்கள் அரசியல் கட்சிகளின் வழிகாட்டுதல் படி மட்டுமே நடக்கும் நேரங்களில்,அறிஞர் குழு ஒன்று அதற்கு மாற்றாக மக்கள் மற்றும் தேச நலன்கருதிச் செயல்பட வேண்டிய தேவை இருக்கும் என்று அரசியல் சட்ட அமைப்பாளர்கள் கருதியதால் நிறுவப் பட்டது.

அது இன்று பல கேலிக் கூத்தான நியமனங்களுக்குப் பயன்படுவது நகைப்புக்கிடமானது.

தெந்துல்கர்,ரேகா போன்றவர்கள் தமது சொந்தத் திறமைகளைப் பயன்படுத்தி அந்தத் துறைகளில் மேல்நிலைக்கு வந்தவர்கள்;அவர்களால் தேச முன்னேற்றதிற்கோ,மக்களின் வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கோ ஒரு சிறிதும் பயன்பாடு இல்லை.அவர்களைப் பாராட்டலாம்,வாழ்த்தலாம்,பரிசளிக்கலாம்,பணம் அளிக்கலாம்..

பல திரைப் பதுமைகளை மாநிலங்களைவைக்கு முற்காலத்தில் தேர்ந்தெடுத்தார்கள்;அவர்கள் அவை நடவடிக்கைகளில் என்ன சாதித்தார்கள்,என்ன பங்களித்தார்கள் என்பதை யாராவது தொகுத்தளித்தால் நல்லது.

இப்போது விளையாட்டுத் துறையிலும் இது துவங்கியிருக்கிறது.

தெந்துல்கர் என்னும் மனிதர்,விளையாட்டுத் துறையின் ஐகன் என்ற வகைகளில் அவர் நியமனம் சரியானதாக இருக்கலாம்;அவர் அவைக்கு உறுப்பினர் என்ற வகையில் என்ன நியாயம் செய்வார் என்பதைப் பொறுத்துதான் பார்க்க வேண்டும் என்று சாரு ஷர்மா சரியாகவே சொன்னார்.

இந்த நியமனம்...சாரி,கொஞ்சம் ஓவர்!

()

ஸ்வீடன் நாட்டின் காவல் துறைத் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற திரு.லின்ட்ஸ்ராமின் பேட்டிப் புத்தகம் இப்போது வெளிவந்திருக்கிறது.





போஃபர்ஸ் பீரங்கி வர்த்தகத்தில் என்ன நடந்தது என்பதை வெளிக் கொண்டு வந்தது அவரது மனசாட்சி உறுத்தியதால் மட்டுமே;இந்து பத்திரிக்கையின் சித்ராவும் ராமும் அதைக் கையில் வைத்துக் கொண்டு கிட்டத்திட்ட இரண்டு ஆண்டு இந்து பத்திரிகையின் விற்பனையை ஒப்பேற்றினார்கள்.

சித்ரா ஏதோ தானே புலன் விசாரணை செய்து கண்டு பிடித்தது போல பல பில்ட்அப் செய்திகள் கொடுத்தார்;ஆனால் உண்மையில் திரு லின்ட்ஸ்ராம் தானே வலியப் போய் சித்ராவிடம் வேண்டிய ஆவணங்களை அளித்திருக்கிறார்,எப்படியாவது இந்த ஊழலின் செய்தி வெளிவர வேண்டும் என்று கருதியதால் !

அப்படி இருந்தும்,நமது அரசுகளும் சிபிஐயும் 20 ஆண்டுகளாக 250 கோடி ரூபாயைப் பொசுக்கி விட்டு ஸ்வீடன் அரசும் அமைப்புகளும் வலிய வந்து தந்த செய்திகளை அரைக்கண் மூடி,பார்க்காமல் இருந்து விட்டு அந்த வழக்கில் ஒன்றும் பிடுக்க வில்லை.ஆனால் இப்போது தெளிவாக அறிக்கையில் க்வாட்ரோச்சிதான் இடைத்தரகின் பலனாளர் என்றும் அவரைக் காப்பாற்றவும்,இந்திய சட்டத்தின் கரங்களிலிருந்து அவர் தப்பிக்கவும் ராஜீவும் சோனியாவும் எல்லா சாத்தியங்களையும் மீறி உதவினார்கள் என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

ஆனால் நாமெல்லாம் எருமைத்தோலர்கள்..எவ்வளவு அடித்தாலும் தாங்குவோம்;இரண்டு லட்சம் கோடி ஊழல்களையெல்லாம் வெற்றிகரமாக சீரணித்து சிவநிலையில் ஆழ்த்திருக்கிறோம்;பிசாத்து 64 கோடி ஊழல்,டிப்ஸ் கொடுத்த மாதிரி நினைத்து மறந்து விட்டிருக்கிறோம்..

ஆனால் ஒன்று,64 நடக்கும் போதே நிறுத்தி ஆப்படித்திருந்தால்,2 லட்சம் கோடியைப் பாராமல் தப்பித்திருந்திருப்போம்!

விதி வலியது!

()

ஆசிய நாடுகளில் குறிப்பாக நிலநடுக்கோட்டுப் பகுதியில் இருக்கும் இந்தியா போன்ற நாடுகளில் சூரிய ஒளியை மின் தேவைகளுக்காகப் பயன்படுத்தும் உத்திகள் நன்றாக உதவக் கூடியவை.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வெக்ட்ரா காற்றாலை நிறுவன ஆசியத் தலைவரை சந்திக்க நேர்ந்த போது அவர் மாற்று மின்சக்திக்கான வாய்ப்புகள் தொழில் அளவில் ஆசியக் கேந்திரத்தில் பிரமாதமாக இருக்கும் என்று அவரது நிறுவனம் நம்புவதாக முன்னுரைத்தார்.

இந்தியாவில் குஜராத் மாநிலம் அதைப் பெருமளவு சாதித்துக் காட்டியிருக்கிறது;இன்னும் தன்னிறைவுக்கும் உபரியான மின்சக்திக்கும் நர்மதை நதிக் கால்வாய்களில் நீர் மட்டத்திற்கு மேல் சூரிய ஒளி மின்சக்தித் தயாரிப்புத்  தகடுகளைப் பதிக்கும் பணி நடைபெறுவதாகவும் இயலுமானால் நர்மதை நதிப் படுகையின் மேலும் இதைப் பரிசீலித்துப் பார்க்கலாம் என்றும் மோடி விரும்புவதாகச் செய்திகள் வருகின்றன.

எல்லாவித குற்றச்சாட்டுகளுக்கு மத்தியிலும் செயல்படும் ஒரு முதல்வராகவும், புதிய பாதைகளை வகுப்பவராகவும் மோடி தெரிகிறார். தமது சூழலுக்கேற்ற வகையில் புதிய திசைகளில் சிந்திப்பவர்கள்தான் எப்போதும் சாதனையாளர்களாக மாறுகிறார்கள் !

பொதுவாக எல்லோரையும் எல்லா நேரத்திலும் திருப்தி செய்யும் ஒரு அரசியல் தலைவர் எங்கும் சாத்தியமில்லை;சிங்கப்பூரின் லீ சீனியரை உள்நாட்டில் திட்டும் பல சிங்கப்பூரர்கள் ஏதாவது ஒரு வேறு ஆசிய நாட்டில் ஒரு வருடம் வசிக்க நேர்ந்தால் திரும்ப வந்து லீ'யின் காலைத் தொட்டுக் கும்பிடுவார்கள் என்பது நிச்சயம் !


மோடி பிரதமாரானால் இந்திய அரசியலிலும் அரசாண்மையிலும் நல்ல மாற்றங்கள் நிகழ வாய்ப்பிருக்கிறது.

இந்திய அரசியலில் வாராது வந்த மாமணி !

()

பதிவுலகில் ஒரு போக்கை சமீப காலமாக அவதானிக்கிறேன்.

எழுதுபவர் பெண்ணாகவோ அல்லது பெண் பெயரிலோ எழுதினால் ஆகா,பிரமாதம்,பேஷ் பேஷ் என்று  வரிசையில் வந்து சொல்வதற்கு ஒரு கூட்டத்தினர் காத்திருப்பது போல் தோன்றுகிறது.

பதிவுலகில் பல அனுபவங்கள் இருந்த போதிலும் கீதா சாம்பசிவம்,காயத்ரி சித்தார்த்,மதுமிதா,செல்வநாயகி,மங்கை,துளசி கோபால்,தமிழ்நதி போன்ற பெண் பதிவர்கள் காத்திரமாகவும்,கருத்துடனும் எழுதிக் கொண்டிப்பதைப் பார்க்கிறேன்.

அவர்களுடைய பதிவுகளில் அச்சுப் பிச்சென்ற பின்னூட்டங்கள் இருக்காது.ஆனால் சில சமீபத்திய பெண் பெயரில் தோன்றும் பதிவுகளில் இவ்வித விசில் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்திருப்பதாகத் தோன்றுகிறது.

இது தோற்றப் பிழையா என்று தெரியப்படுத்தினால் மகிழ்வேன்.



()



இந்த குறுந்தொகைக்கான நகைச்சுவை ! சிறிது அவலச் சுவை சார்ந்திருந்தால் மன்னிக்கவும் !

:))

மேற்கண்ட பதிவிற்காக பதிவர் காவிரி மைந்தனுக்கும், படங்களுக்காக தினமலர்,என்டிடிவி'க்கு நன்றியுடன்

()

ஒரு பிற்சேர்க்கை..இரண்டு நாட்களுக்கு முன்னர் வந்த தினமணி மதியின் தெந்துல்கர் நியமனம் தொடர்பான கார்ட்டூன் சொல்ல வேண்டியதை நச்சென்று இதை விட சொல்ல முடியாது.

பத்ரிக்கு சிறப்புப் பார்வை !
:))

4 comments:

  1. தெந்துல்கரின் மாநிலங்களவை பற்றிய நியமன ஒப்புதலுக்கு வரும் எதிர்வினைகள் எனக்கு வியப்பளிக்கவில்லை.

    மஞ்சரேகர் தெந்துல்கர் இப்படி ஒத்துக் கொண்டது வியப்பளிக்கிறது என்றும்,அவர் அனுக்கமாக அறிந்த குழு நண்பராக இருந்த தெந்துல்கர் காட்டிய குணநலன்களை அறிந்த தனக்கு தெந்துல்கரின் ஒப்புதல் வியப்பளிக்கிறது என்பது அவரது கருத்து..

    சிபிஜ கங்குலிக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என்று சொல்கிறது.

    இன்னும் தோனி,திராவிட் என்று பலர் இருக்கிறார்கள்..
    :)

    ReplyDelete
  2. இன்றுதான் தங்கள் பதிவுப் பூங்காவினுள் நுழைந்தேன்
    அருமை.
    மோடி குறித்த கருத்தில் எனக்கும் உடன்பாடு உண்டு
    நாம் ஒருவரிடம் உள்ள சிறப்பை அவரிடம் உள்ள
    சிறு குறைபாட்டைக் கொண்டு ஒதுக்கிவிடுவதால்
    பல சிறந்த மனிதர்களின் செயல்பாடுகளை
    அதிகமாகஇழந்திருக்கிறோமோ
    எனத் தோன்றுகிறது
    மோடி இடத்தில் ஒரு அமீர் இருந்தாலும்
    பாராட்டும் பக்குவம் நம் மக்களுக்கு என்று வரும் ?
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. திரு ரமணி,
    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    பொதுவாகவே இந்தியாவில் ஒரு காரியம் செய்யப்படும் போது அது யாரால் செய்யப் பட்டது என்று பார்க்கின்ற வழக்கம் நமது இரத்தத்திலேயே ஊறி விட்டது. :)

    செய்வது மோடியாக இருந்தாலும் மஸ்தானாக இருந்தாலும் செய்யும் காரியத்தையும் விளைவையும்தான் பார்க்க வேண்டும் என்பதை ஒரு வலிந்த விதியாகவே வைத்திருக்கும் போதுதான் நிகழ்வை மட்டும் பார்க்கும் பார்வை கிடைக்கக் கூடும்..

    இன்றைய தேதியில் நிதீஷ்குமார் மற்றும் மோடி தவிர வேறு யாரும் சொல்லிக் கொள்ளும் படி செயல்படுவதாகத் தெரியவில்லை.

    ReplyDelete

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...