குறள் சிந்தனை

அறவினை யாதெனில் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாம் தரும்-321

அறமாகிய செயல் என்னவென்றால் எவ்வுயிரையும் கொல்லாமையாகும்;கொல்லுதல் அறமல்லாத மற்ற எல்லா செயல்களையும் விளைவிக்கும்.
பிற உயிர்களைக் கொன்று தின்னும் புலால் உணவுக்கு மாறும் போதோ அல்லது கைக் கொள்ளும் போதோ, சிறிது சிறிதாக அவை சார்ந்த அனைத்து பிற பழக்கங்களும் நம்மை வந்தடைந்து, நாளடைவில் அறமல்லாத அனைத்து செயல்களையும் செய்பவர்களாக நாம் மாறி இருப்போம் என்பதைக் குறிப்பால் உணர்த்துவது இக்குறளின் விரிந்த பொருள்.

பகுப்பு

*நட்சத்திரவாரம்-2* (12) *நட்சத்திரவாரம்* (10) Madras Paper (3) அஞ்சலி (2) அரசாண்மை (16) அரசியல் (30) அறநெறிச்சாரம் (1) அறிவியல் எழுத்து (2) அறிவியல் நிகழ்வு (2) அனுபவம் (16) ஆசிரியர் மாணவர் (2) ஆய்வு (1) ஆன்மிகம் (6) ஆஸ்கர் (1) இசை (6) இலங்கைத்தமிழர் (3) இளையர் (2) ஈழத்தமிழர் (1) உலக அரசியல் (2) ஊர் சுற்றல் (2) ஔவையார் (4) கணிதம் (1) கணினித் தொழில்நுட்பம் (1) கம்பன் (1) கலைகள் (2) கல்வி (3) கவிதை (5) காதல் (1) காமம் (2) காளமேகப் புலவர் (1) கிரிக்கெட் (2) குடிமைப் பண்புகள் (1) குமரகுருபரர் (1) குழந்தைகள் (3) குழந்தைப் பேறு (1) கொன்றை வேந்தன் (1) சச்சின் (1) சமூகம (2) சமூகம் (50) சமையல் கலை (1) சிங்கை (9) சித்திரக்கவி (1) சிவ்வாக்கியர் (1) சினிமா உலகம் (4) சீனா (1) சுதந்திர தினம் (1) சுயதம்பட்டம் (6) சுயமுன்னேற்றம் (2) சைவசித்தாந்தம் (2) சைவம் (1) தகவல் உதவி (2) தகவல்தொழில்நுட்பம் (1) தமிழர் (7) தமிழர் வரலாறு (6) தமிழ்இசை (3) தமிழ்மொழி/இலக்கியம் (45) தனிப்பாடல் திரட்டு (1) திரிகடுகம் (1) திருக்குறள் (3) திருஞானசம்பந்தர் (2) திருமந்திரம் (2) திருமுறை (2) திருமுறைப் பயிற்சி (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திரை உலகம் (5) திரைப்பட அனுபவம் (5) தேசியம் (9) தேர்தல் 2011 (5) தேர்தல் 2016 (1) தொலைக்காட்சி (4) தொழில்நுட்பம் (3) தோழமை (1) நகைச்சுவை (6) நல்லாதனார் (1) நாட்டு நிலை (34) நாளொரு பாடல் (15) நிதிநிலை (1) நீங்களே சொல்லுங்கப்பு (2) நீதிநெறி விளக்கம் (1) நீதிமன்றங்கள் (1) நுண்கலைகள் (2) பகுத்தறிவு (1) பதிவுக்களம் (4) பத்திரிகையுலகம் (2) பலசரக்கு (14) பழமொழி (1) பாரதி (2) பாலியல் கல்வி (2) புகைப்படக் க(லை)விதை (1) பெண்மை (1) பொது (31) பொருளாதாரம் (17) மருத்துவம் (1) மானுடம் (3) மூதுரை (2) மொழி (3) யோகம் (2) லீ க்வான் யூ (1) வணிகம் (1) வரலாறு முக்கியம் (2) வாசிப்பனுபவம் (9) விளையாட்டு (3)

Thursday, May 31, 2012

143.என்ன நடக்கிறது பெட்ரோல் விலையில் ? - 2



சென்ற பதிவில்

-க்ரூட் சுத்திகரிக்கும் போது பல விளைவுப் பொருட்கள் கிடைக்கின்றன
அதில் பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு முதலியவை முக்கியமானவை
-கிடைக்கும் பொருட்களில் 7 சதம் மட்டுமே பெட்ரோலாகவும், ஏறக் குறைய 55 சதம் டீசல்,மண்ணெண்ணெய்,மற்றும் சமையல் எரிவாயுவும், ஏறக்குறைய 40 சதம் மற்ற விளைபொருட்களும் கிடைக்கின்றன.
-பெட்ரோலின் விற்பனை விலையில் ஏறத்தாழ 55 சதம் மத்திய மாநில அரசுகளின் வரிவிதிப்பால் கூடும் மதிப்பு.
-முக்கியப் பெட்ரோலியப் பொருட்களான பெட்ரோல்,டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவுக்கான விற்பனை விலை,உற்பத்தி விலையை விடக் குறைவாக இருப்பதால் மத்திய அரசு பெட்ரோலியப் பொருள்களுக்கு மானியம் அளிக்க வேண்டியிருக்கிறது.

மேற்கண்டவற்றில் முதல் இரண்டைப் புரிந்து கொள்வதில் குழப்பம் இருக்காது;மூன்றாவது சிறிது குழப்பலாம்..தொடர்வோம் !


தலை சுற்றும் பெட்ரோலுக்கான அடக்க விலை(Total manufacturing cost) கணக்கீடு:

இப்போது சிறிது கணக்குப் போட்டுப் பார்க்கலாம்.

க்ரூட் எண்ணெய் சர்வதேச வியாபாரத்தில் பேரல் எண்ணிக்கையில் விற்கப்படுகிறது. சென்ற வாரத்தில் அது ஒரு பேரலுக்கு அமெரிக்க டாலர் 105 க்கும் மேல் சென்று விட்டது.ஒரு பேரல் என்பது 160 லிட்டர் கொண்டது.

ஒரு பேரல் க்ரூட் இந்திய விலையில் ரூ.5500 என்று வைத்துக் கொண்டால்,ஒரு லிட்டர் பெட்ரோலுக்கான க்ரூட் மூலக்கூறின் விலை சுமார் ரூ.34.50 வருகிறது. இது பெட்ரோலுக்கான மூலப் பொருளின் அடக்க விலை, அதாவது raw material cost of petrol constituent. இதற்கு மேல் சுத்திகரிப்புக்கான செலவு,ஒஎம்சி நிறுவனங்கள் அதை விநியோகிக்க செய்யும் செலவு ஆகியவை பெட்ரோலுக்கான உற்பத்திச் செலவில் சேர்கின்றன.



இந்தச் செலவுகள் விளை பொருட்களான பெட்ரோல்,மண்ணெண்ணெய்,டீசல் மற்றும் சமையல் எரிவாயுக்கான உற்பத்திச் சுத்திகரிப்புச் செலவாக கணக்கிடப் படுகின்றன.

மதிப்புக் கூட்டும் விதமாக பெட்ரோலுக்கான விலை, க்ரூடின் அடக்க விலை,இறக்குமதி வரி, டீலருக்கான தரகு, அதற்கு மேல் உற்பத்தியில் சுத்திகரிப்புக்கான செலவு, அதன் மேல் விதிக்கப்படும் கலால்-எக்சைஸ்-வரி,அதற்கும் மேலான மாநில விற்பனை வரிகள் இவை எல்லாம் சேர்த்து விலை கணக்கிடப்பட்டு ரூ.75 வருகிறது. இந்த ரூ 75 என்பது அரசு ஓஎம்சி.க்களுக்கு அளிக்கும் மானியங்களை உள்ளடக்காமல் கிடைக்கும் விலை.
அரசு அளிக்கும் மானியமான சுமார் ரூ.9.50 ஐயும் சேர்த்தால் அடக்க,சுத்திகரிப்பு,வரிகள் உள்பட பெட்ரோல் தயாரிப்பு விலை சுமார் ரூ.86 அளவில் இருக்கலாம்.

இந்தத் விலையில் ஓஎம்சி நிறுவனங்கள் தங்கள் சுத்திகரிப்புக்கான செலவு மற்றும் விற்பனை விநியோகத்திற்கான செலவு மற்றும் சில்லரை விற்பனையாளர்களுக்கான தரகுத் தொகை-sales commission- அனைத்தையும் பெற்று விடுகிறது என்பதை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.


வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அரசு ஓஎம்சி நிறுவனங்கள் செலவு செய்யும் சுத்திகரிப்புக்கான செலவு அரசு அளிக்கும் மானிய இழப்புக்கு மேல் இருக்கலாம் என்பது புரியம். இதற்கான சரியான கணக்கீட்டை அரசோ அல்லது ஓஎம்சி நிறுவனங்களோ பொதுத்தளத்தில் பகிர்வதாகத் தெரியவில்லை.

இதனால் பெட்ரோலுக்கான மூலப் பொருள் விலை,அதன் மீது செய்யப்படும் சுத்திகரிப்புச் செலவு, இவை இரண்டின் அடக்கதில் அரசு விதிக்கும் சுமார் 120 சதம் மொத்த வரிகள் சேர்த்து பெட்ரோலின் விலை சுமார் ரூ.86 அளவில் இந்தியாவில் இருப்பதால்,அரசு அளிக்கும் மானியமான ரூ.9.50 க்குப் பிறகு சில்லரையில் சுமார்.ரூ 75 க்கு பெட்ரோல் விற்பனை செய்யப்படுகிறது.(தற்போதைய விலையேற்றத்தையும் சேர்த்து).
இந்தக் கணக்கீடு தோராயமாக விளக்கத்திற்காகச் சொல்வது.சிறு சிறு வேறுபாடுகள் கணக்கீட்டில் இருக்கலாம்.

டீசல்,மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு விலைகளின் தாக்கம்:


இந்தியாவில் அரசு கொள்கையாளர்கள் பல காரணங்களுக்காக டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு விலைகளை  மொத்த உற்பத்தி மற்றும் வரிகள் சேர்த்த அடக்க விலையில் இருந்து சுமார் 30 சதம் முதல் 55 சதம் வரை மானிய விலையில் விற்க வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கின்றன.(இப்போது சென்ற பதிவிற்குச் சென்று டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய்கான மானிய விவரங்களை ஒரு முறை பார்த்து விடுங்கள்!)
இந்த மூன்று பொருள்களுமே மானியத்தின் மூலம் பெரும் நிதிச் சுமையை அரசுக்கு அளிக்கின்றன.

கடந்த இருபதாண்டுகளில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களில் விலை உயர்த்தப்பட்ட போது
அதே அளவில் சர்வதேச நிலைக்கேற்ப டீசல்,சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகள் உயர்த்தப் படவில்லை.வேறு வார்த்தைகளில் சொன்னால் நான்கு பெட்ரோலியப் பொருள்களில் பெட்ரோலில் மட்டுமே அரசுக்கான மானிய நிதிச்சுமை மிகக் குறைந்த அளவில் இருக்குமாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

டீசல் புகைவண்டிகள்.நாடெங்கும் இருக்கும் மற்ற போக்குவரத்து வாகனங்கள் அனைத்திற்கும் தேவை.அவை உயர்த்தப் பட்டால் எல்லாப் பொருள்களிலும் அவற்றின் தாக்கம் தெரியும் சமூகக் காரணிகள் இருக்கின்றன.

சமையல் எரிவாயு உயர்த்தப் பட்டால் சாமானியனின் பணப்பையை நேரடியாக அது பாதிப்பதால், உறுதியாக அடுத்த தேர்தலிலேயே அதன் எதிரொலி தெரியும் பயம் இருப்பதால் அதிலும் கை வைப்பதில்லை.

மண்ணெண்ணெய் விலையிலும் இதே காரணத்திற்காக விலையேற்றம் செய்யமுடியாது;ஏனெனில் இந்தியாவில் இன்னும் மின்சாரம் இல்லாத பெரும்பான்மை மக்களின் வீடுகளில் ம.எண்ணெய் விளக்குகள்தான் பயன்பாட்டில் இருக்கின்றன.

எனவே சமூக மற்றும் பதவியைக் காப்பாற்றும் காரணங்களுக்காக பெட்ரோலில் மட்டும் அதிக விலையேற்றம் வைக்கப்படுவதால் பெட்ரோல் மட்டும் அதீத விலைக்குச் சென்று விட்டதாக கருத்தாக்கம் நிலவுகிறது.


தீர்வு என்ன?

பெட்ரோலியப் பொருட்கள் விலை நிர்ணயத்தில் நடக்கும் குளறுபடிகளை அலசும் விற்பன்னர்கள் பின்வரும் கருத்துக்களைக் கூறுகிறார்கள்.

1. தனது வருவாய் வரவினங்களுக்கு சீரான நேரடி வரிக் கொள்கையைக் கடைப் பிடிக்க முடியாத அரசின் கையாலாகத் தனத்தை மறைக்க பெட்ரோலியப் பொருள்களின் மீது உச்சபட்சமாக உற்பத்தி மற்றும் இறக்குமதி வரிகள் விதிக்கப்படுகின்றன. பெட்ரோலியப் பொருள்களின் மீது விதிக்கப்படும் வரிகளால் மட்டும் நேரடி வரிவிதிப்பைக் காட்டிலும் அதிகப் பணத்தை மத்திய அரசு பெறுகிறது. இது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.பின்வரும் படத்தில் ஆசிய நாடுகளில் பெட்ரோல் விற்பனை விலையில் வரிகளின் பங்கு எவ்வளவு என்ற விவரத்தைப் பாருங்கள் !!!!



2. இந்தியாவில் பொதுப் போக்குவரத்தின் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு அதிகரிக்கப் பட்டு ஊழல்கள் ஒழிக்கப்பட வேண்டும்; பொதுப் போக்குவரத்து முதன்மையான போக்குவரத்து சாதனமாக இருக்கும் நிலை வர வேண்டும்; தனிப் போக்குவரத்து அதி வசதி தேவையானால் மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும்.

3. இந்திய ஓஎம்சி நிறுவனங்கள் அனைத்தும் அரசுத் துறை நிறவனங்கள். இவற்றின் சுத்திகரிப்பு தொழில் நுட்பமும். முறைகளும்-ப்ராசஸ்- காலாவதியானவை. இத்துறையில் 40 சதவீத அளவிற்காவது தனியார் துறைகளின் பங்கீட்டை அரசு அனுமதிக்க வேண்டும்;போட்டித் தன்மை இல்லாத ஓஎம்சி நிறுவனங்கள் அண்டாக்கா கசம் என்று பணத்தை விழுங்கும் தயாரிப்புச் செலவில் இயங்குகின்றன.

4. இந்திய ஓஎம்சி நிறுவனங்களின் சுத்திகரிப்பு முறைகளில் வீணாகும் சதம் உலக அளவில் அதிகமான ஒன்று.

5. ஒரே வீச்சில் மானியங்களை எடுத்து விட்டு, சமையல் எரிவாயு மற்றும் ம.எண்ணெய் வினியோகத்தில் இருக்கும் கள்ளச் சந்தையை அரசு இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.( பெரும்பான்மை சதவீத மண்ணெண்ணெய் கள்ளச் சந்தைக்கு மாற்றப் படுவதன் மூலம் மானியத்தின் சகாயத்தை இடைநிலை தனியார் வியாபாரிகள்தான் அனுபவிக்கிறார்கள்.எளிய வார்த்தைகளில் சொன்னால் நமக்கு நியாயவிலைக் கடையில் கிடைக்கும் ம.எண்ணெய் மாதத்திற்கு 2 லிட்டர் ரூபாய் 18 க்குக் கிடைக்கிறது. ஆனால் வெளி விற்பனையில் மண்ணெண்ணெய் ரூ 40,சில சமயம் ரூ.50 வரை போகிறது.காரணம் கையாலாகாத அரசின் மின் விநியோகக் குழப்பங்களால் எவரும் ஜெனரேட்டர் என்னும் மின்உற்பத்தி சாதனம் இல்லாது வாழ முடியாத நிலை.இப்போது வீடுகளில் கூட ஜெனரேட்டர் வைக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

இதே நிலை சமையல் எரிவாயுவிலும் நடக்கிறது.அப்பாவிப் பொது சனம் சிலிண்டர் பதிந்து விட்டு இரண்டு மாதம் காத்திருக்க தெருவோர டீக்கடைகளுக்கும் கார்களுக்கும் சமையல் எரிவாயு திருட்டுத்தனமாக கள்ளச் சந்தை விலையில் தங்குதடையின்றி வழங்கப் படும் நிலை)

எனவே அரசிடம் வாங்கினாலும் வெளிச் சந்தையில் வாங்கினாலும் ம.எண்ணெய் ரூ.40 மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.600 என்பது போன்ற சீரான வெளிப்படை விநியோகம் நடக்க வேண்டும். அதே நேரம் வணிக நோக்கிற்கான எரிவாயு தனியாகப் பிரிக்கப்பட்டு ரூ.900 என்ற வகையில் விற்பனை செய்யப்படவேண்டும்.

சமையல் எரிவாயு விநியோகத்தில் இருக்கும் கள்ளத்தனம் முற்றாக அகற்றப் படவேண்டும்.
5. தனியார் முதலீடுகள் பெட்ரோலியத் தயாரிப்பில் அனுமதிக்கப் படும் அதே நேரத்தில் விதிகள் அவர்களுக்கு இந்திய அரசால் முறையற்று வளைக்கப் படுகின்றன.ரிலையன்சின் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு  க்ரூட் ஆயில் எடுத்துச் செல்லப்படுவதற்கு ஸீரோ காஸ்ட் பாலிசி அனுமதிக்கப் பட்டிருப்பதாக சில செய்திகள் தெரிவிக்கின்றன.

எரிவாயுவுக்கான ஆசிய நாடுகளின் விலை விகிதங்கள் பின்வரும் படத்தில்....





ஏன் இவை செய்யப்பட வேண்டும்?

இந்தக் குழப்பங்களை நீக்கி விட்ட நாடுகள் என்ன செய்திருக்கின்றன என்று பார்த்தாலே, ஏன் இந்தத் தீர்வுகள் மேற்கொள்ளப் படவேண்டும் என்று தெரிந்து விடும்.

ஆசியாவில் முன்னேறிய அல்லது முன்னேறிக் கொண்டிருக்கும் எந்த நாட்டையும் பாருங்கள்; அவற்றின் பொதுப் போக்குவரத்து சீரான மக்களுக்கு அதிக வசதி அளிக்கும் நிலையில் கடந்த இரண்டு பத்தாண்டுகளில் மாற்றம் பெற்றிருக்கின்றன. சிங்கப்பூர்,ஹாங்காங், சீனா, மலேசியா போன்ற எல்லா நாடுகளிலும் தடையற்ற சீரான பொதுப் போக்குவரத்து வசதிகள் அசத்தும் வண்ணம் உருவாகி நிர்வகிக்கப் படுகின்றன.
இந்திய ரயில்களில் பல பெட்டிகள் 50 களில் செய்யப்பட்டவை என்பதோடு இந்த நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள்.

கார்களின் எண்ணிக்கை தயவு தாடசணியமின்றி குறைக்கப் படவேண்டும். கார் வைத்துக் கொள்ள சிங்கப்பூர் போல தனிக் கட்டணம் செலுத்த வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் வர வேண்டும். ஆனால் இதற்கு முன் முதல் நிலை பொதுப் போக்குவரத்து வசதிகள் பொது மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதே மறந்து விடக் கூடாது.

மாநில அளவில் நதிகளில் சாக்கடைகள் கலப்பதைத் தடை செய்து அவற்றை இணைத்து, நீர் வழியாக சிறு படகுப் போக்குவரத்ததை ஊக்குவிக்க வேண்டும். சீனாவில் இவ்வகைப் போக்குவரத்து வசதிகள் பிரபலம். சுற்றுலாத் துறையும் இதனால் வளரும்.


இவற்றையெல்லாம் செய்ய சீரிய தலைமையும், ஊழல் மற்றும் தவறுகளுக்கெதிரான இறுக்கமான நிர்வாகமும் திறமையான அமைச்சர்களும் தேவை.

இந்திய அரசியல் தலைமைகளின் டர்பன்கள்,குர்தாக்கள் மற்றும் சால்வைகளுக்குள் வண்டி வண்டியாக ஊழல் முடை நாற்றங்கள்தான் இருக்கின்றன என்பதுதான் பெரும் சோகம்!


சோகத்தை வெனஸஸா ஹட்ஜன்ஸ்'ஐப் பார்த்து ஆற்றிக் கொள்ளுங்கள்...
:)




Wednesday, May 30, 2012

142.என்ன நடக்கிறது பெட்ரோல் விலையில் ? - 1



இந்தியாவில் பெட்ரோல் ஒரு லிட்டருக்கு ரூ.7.50 அதிகரித்ததும் நாடெங்கும் எழுந்த கூக்குரலும் பின்னர் ரூ 1.05 வரை இந்த அதிகரிப்பு குறைக்கப் படலாம் என்றும் அறிவிப்பும் வருகின்றன.

இந்த விலை விதிப்புக்கு பல்வேறு அரசியில் கட்சிகளும் போராட்டம் அறிவித்து அரசுக்கு எதிரான அறிக்கைகள் அளித்து ‘நான் ரொம்ப யோக்கியன்’ என்னும் விதமான கருத்தாக்கத்தைப் பரப்பி விட்டன;இனி அந்தந்த கட்சித் தலைவர்கள் ஆட்சியில் இருப்பதோ இல்லாததையோ பொறுத்து மலைவாச இடங்களைக்கோ அல்லது பெங்களூருக்கோ ஓய்வெடுக்கப் போய் விடுவார்கள்.

உங்களையும் என்னையும் போன்ற நாதியற்ற இந்தியர்கள் நான்கு நாட்கள் அனைத்து அரசியல் கட்சிகளையும் அரசையும் திட்டிவிட்டு தண்ட இழவே என்று எவ்வளவு விலை கொடுத்தாவது பெட்ரோல் போட்டுக் கொண்டு இரு சக்கர வாகனத்திலோ அல்லது காரிலோ போக ஆரம்பித்து விடுவோம்.

உண்மையில் பெட்ரோல் விலை நிர்ணயத்தில் என்ன நடக்கிறது? அடிக்கடி பெட்ரோல் விலை ஏற்றப்படும் போது நடைபெறும் கொந்தளிப்புகளைத் தடுக்க முடியாதா?

விவரங்கள் கொஞ்சம் சிக்கலானவையும்,நிறைய சுவாரசியமானவையும். எப்படி என்று பார்க்கலாம்.

எண்ணெய் தொகுப்பு நிதி(Oil Pool Account)

2002 ஏப்ரல் 1 ம் தேதிக்கு முன்னால் வரை இந்திய அரசு, பெட்ரோலியப் பொருள்களின் விலையை அரசே நிர்வகித்து வந்தது;அதோடு இந்த விலை நிர்ணயத்தில் நிகழும் சாதக பாதங்களைச் சமாளிக்க ஆயில் பூல் அக்கவுண்ட் என்ற ஒரு தனித் தொகுப்புத் நிதியை வைத்திருந்தது;இதனால் சர்வதேச சந்தையில் க்ரூட் விலையில் என்ன மாற்றங்கள் வந்தாலும் அரசு நிர்ணயிக்கும் விலையின் மூலம் அந்த தனித் தொகுப்பு அக்கவுண்டிற்கு பணம் சேர்ந்து கொண்டோ குறைந்து கொண்டோ வந்தது

2002 ஏப்ரலுக்குப் பிறகு (இந்தியன் ஆயில்,பாரத் பெட்ரோலியம் போன்ற) ஒஎம்சி (Oil Marketing Companies) நிறுவனங்கள் தாங்களே பெட்ரோல் பொருள்களுக்கான விலையை நிர்ணயிக்கும் உரிமையை வழங்கிய அரசு அதோடு ஆயில் பூல் அக்கவுண்ட்டை ஒழித்து விட்டு அதை பொது வரவு செலவு அறிக்கையோடு சேர்த்து விட்டது.

உங்களுக்கெல்லாம் பெட்ரோல் க்ரூட் ஆயில் எனப்படும் எண்ணெயிலிருந்து சுத்திகரிக்கப் பட்டுத்தான் எடுக்கப்படுகிறது என்று தெரியும்.இந்த க்ரூட் ஆயில் பெருமளவு (76 %) இறக்குமதிதான் செய்யப்படுகிறது. எனவே ஆதாரமான பெட்ரோலின் விலை இறக்குமதியாகும் க்ரூட் ஆயிலின் சர்வதேச விலையைப் பொறுத்து மாறுபடும் என்பதை இந்த இடத்தில் புரிந்து கொள்வோம்.

இந்த க்ரூட் ஆயில் சுத்திகரிப்பைதான் இந்திய அரசு பங்குதாரராக இருக்கும் ஒஎம்சி எனப்படும் ஆயில் மார்க்கெட்டிங் கம்பெனிகள் செய்கின்றன.
இந்த எளிய தொடர்பைப் புரிந்து கொள்ளும் ஆதாரமான இந்தியர்கள் கேட்கும் கேள்வி, ‘சரி, க்ரூட் விலை உயரும் போது பெட்ரோல் விலையை உயர்த்தும் ஒஎம்சி நிறுவனங்கள் சர்வதேச விலை குறையும் போது ஏன் இந்திய பெட்ரோல் பொருள்களின் விலையைக் குறைப்பதில்லை? என்பது.

இதற்கான பதிலைப் புரிந்து கொள்ள மேலும் பல விதயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.


விலைப் பகுப்பு விவரம்
 க்ரூட் எண்ணெயில் இருந்து பெறப்படும் பெட்ரோல் ஒரு லிட்டருக்கான விலை ஒரு ரூபாய் என்று வைத்துக் கொண்டால்,பெட்ரோல் சில்லரை விலையில் ரூ 2.20 க்கு விற்கப் படுகிறது. எப்படி? இப்படித்தான்..

இறக்குமதியாளருக்கான கமிஷன் - 1 %
இறக்குமதி வரி - 4%
கலால் அல்லது உற்பத்தி வரி - 32%
விற்பனை வரி - 17%

ஆக பெட்ரோல் விலையில் 54% வரிகளினால் ஏற்படுகிறது. இதில் 17% சத வரியை மாநிலங்களும் மத்திய அரசுகளும் பங்கிட்டுக் கொள்ளும் போது எஞ்சிய 37% மத்திய அரசின் பணத்தொகுப்புக்குப் போகிறது.





இதே இடத்தில் இன்னொரு விவரத்தையும் பார்த்து விடுவோம். இந்திய அரசுக்கான வரவு செலவுத் திட்ட விவரங்களின் படி அரசுக்கான வருவாயில் முக்கிய வருவாய் இனங்கள் நேரடி மற்றும் மறைமுக வரி விதிப்புகளிலிருந்து வருகிறது. அதில் நேரடி வரிவிதிப்பிலிருந்து வரும் வருமானமும் எண்ணெய்ப் பொருள் உற்பத்தியிலிருந்து கிடைக்கும் மறைமுக வரிவிதிப்பிலிருந்து வரும் வருமானத்திற்குமான விவர விகிதங்களின் பகுப்பு விவரம் பின்வருமாறு…



ஆக விலைச் சுமையின் பெரும் பகதி எதனால் வருகிறது என்பது ஒரளவு இப்போது புரியும்.




சுத்திகரிப்பு விளைபொருட்கள்(Refinary By Products)
ஒஎம்சி நிறுவனங்கள் க்ரூட் ஆயிலைச் சுத்திகரிக்கும் போது பெட்ரோல்,மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு,டீசல் ஆகிய பொருட்களோடு எத்தனால், போன்ற மற்ற துணைப் பொருள்களும் கிடைக்கின்றன.ஆக க்ரூட் எண்ணெயின் விலையில் சர்வதேச விலையில் ஏற்படும் மாற்றங்கள் இந்த நான்கு பொருள்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஆனால் அவ்வாறு நடப்பது இல்லை

மானியக் கிணறு
பல நாடுகளில் பெட்ரோல் விலையின் ஒரு சிறிய ஒப்பீட்டைப் பார்க்கலாம்.

Country
$ per Ltr 2010
`/ ltr
$ per Ltr 2011
`/ ltr
$ per Ltr 2012
`/ ltr
% Deviation from India, 2012
Australia
1.20
53.80
1.42
65.00
1.54
78.60
8%
Bahrain
--
--
0.21
10.00
0.21
11.90
-84%
Doha, Qatar
--
--
0.22
10.20
0.27
14.20
-81%
Dubai, UAE
--
--
0.47
21.30
0.48
24.40
-67%
Germany
--
--
2.17
100.20
2.27
113.30
55%
Great Britain
--
--
--
--
2.18
118.90
63%
Hongkong
--
--
0.78
35.10
2.21
108.90
49%
Hungary
--
--
2.09
92.70
2.14
110.30
51%
India
1.22
56.00
1.48
72.90
1.48
72.90
--
Iran
0.37
17.40
0.39
17.40
--
--
--
Ireland
--
--
1.99
103.20
2.06
102.80
41%
Italy
1.83
83.00
2.07
102.30
2.36
118.60
63%
Japan
--
--
1.84
94.30
1.84
94.30
29%
Malaysia
--
--
0.62
28.10
1.90
33.39
-54%
Mexico
--
--
--
--
0.80
40.80
-44%
Netherland
--
--
2.40
110.80
2.42
121.30
66%
New Zealand
--
--
1.55
70.00
1.67
91.00
25%
Nigeria
--
--
--
--
0.56
31.30
-57%
Norway
--
--
2.47
109.10
2.62
130.90
80%
Pakistan
0.79
36.60
0.97
45.80
1.16
59.00
-19%
Poland
--
--
1.07
52.60
1.81
88.10
21%
Russia, Moscow
--
--
--
--
1.02
50.20
-31%
Scotland
--
--
--
--
2.29
124.90
71%
SriLanka
1.01
46.40
1.14
52.90
1.25
61.70
-15%
Sweden
--
--
2.34
103.40
2.25
112.40
54%
Tel Aviv, Israel
--
--
--
--
2.11
103.90
43%
Thailand
--
--
--
--
1.39
71.10
-2%
UK
1.94
86.70
2.21
99.10
2.20
119.80
64%
USA
0.64
30.00
0.96
48.40
1.07
53.70
-26%

இந்த அட்டவணையில் கடைசி மேல்கீழ் வரிசையில் அந்தந்த நாடுகளின் விலை இந்தியாவின் விலையிலிருந்து எந்த அளவிற்கு அதிகம் அல்லது குறைவாக வைக்கப்பட்டிருக்கிறது என்பது தெரியும். அதாவது இங்கிலாந்தின் பெட்ரோல் விலை இந்தியாவில் விலையை விட 64 சதம் அதிகம்;அமெரிக்காவின் பெட்ரோல் விலை இந்திய விலையை விட 26 சதம் குறைவு.
எப்படி சில நாடுகள் பெட்ரோல் விலையை குறைந்த அளவில் வைக்க முடிகிறது??

காரணம் இந்தியாவில் நிலவும் மானியங்கள் !!

முன்பே க்ரூடிலிருந்து பெட்ரோல் தவிர டீசல், மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு போன்றவற்றோடு மேலும் சில துணைப் பொருட்களும் கிடைக்கின்றன என்று பார்த்தோம்; அப் பொருட்களின் உற்பத்தி விகிதாசாரம் என்னவென்றும் பார்த்து விடுவோம்.அதாவது ஒரு யூனிட் க்ரூட் ஆயிலைச் சுத்திகரிக்கும் போது கிடைக்கும் விளை பொருட்கள் 100 சதம் எனில், அதில் 7 சதம் மட்டுமே பெட்ரோல். 36 சதம் டீசல், மண்ணெண்ணெய் 8 சதமும் சமையல் எரிவாயு 9 சதமும் மற்ற பொருட்கள் 40 சதமும் கிடைக்கின்றன..



இதில் டீசல்,மண்ணெண்ணெய் மற்றும் சமையல் எரிவாயுவிற்கான உற்பத்தி விலை இன்றைய அவற்றின் சந்தை விலையை ஒப்பிடும் போது பெருமளவு குறைவாக இருப்பதாக ஒஎம்சி நிறுவனங்களின் கணக்கீட்டின் படி அரசு பின்வருமாறு மானியத் தொகையைப் பட்டியிலிடுகிறது

பெட்ரோல் - ரூ. 9.5 ஒரு லிட்டருக்கு
மண்ணெண்ணெய் - ரூ. 21.0 ஒரு லிட்டருக்கு
டீசல் - ரூ 11.3 ஒரு லிட்டருக்கு
சமையல் வாயு - ரூ 380.0 ஒரு சிலிண்டருக்கு

இந்த வித்தியாசத்தால் ஏற்படும் இழப்பை அரசு மானியமாக ஆயில் பத்திரங்கள் (Oil Bonds) மூலமும் மற்ற இழப்பீட்டு வடிவிலும் வழங்குகிறது. எனினும் இப்பற்றாக் குறை 2010 அளவில் 80000 கோடிக்கும் அதிகம் என்று ஒஎம்சி நிறுவனங்கள் குறைப்பட்டுக் கொள்கின்றன.

சுமார் 74 ரூபாயான பெட்ரோல் விலையில் ஏறத்தாழ 55 சதம் வரிகளினால் ஆனது என்று சொன்னேன்;அதே நேரத்தில் அரசு மானியமாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 9.5 வழங்க வேண்டியிருக்கிறது என்றும் சொல்கிறேனே..குழப்பமாக இருக்கிறதா ?  

சிறிது அலசினால் குழப்பம் தெளிந்து விடும்....

-தொடரும்

உரத்துச் சொல்லுங்கள்..உங்கள் கருத்தை !

பதிவைப் பற்றிய உங்கள் கருத்தை வரவேற்கிறேன் ! பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் தமிழ்மணப் பதிவுப் பட்டையில் வாக்களித்து, மேலும் பலர் இதனைப் படிக்க உதவுங்களேன்.. நன்றி !

பெரிதும் பார்க்கப்பட்டவை..All time favorites

பார்வைப் புலம்...